விநாயகருக்கு பிடித்த நிவேதன பொருட்கள் என்ன தெரியுமா...?

Sasikala|
முழுமுதற் கடவுள், யானை முகத்தான், கடவுள்களில் முதன்மையாக வணங்கப்பட வேண்டியவர் என பல சிறப்புகளைப் பெற்றவர் விநாயகர்.

எல்லா கோயில்களிலும் முதலில் நுழைந்ததும் இருக்கக் கூடியவர் கணபதி. இவரை வணங்கிய பின்னரே மற்ற கடவுளை வணங்க வேண்டும் என்ற நியதி இந்து மதத்தில் உள்ளது. கோயில்களில் மட்டுமல்லாமல். தெருக்களில் அதிக சிறு கோயில்களைக் கொண்டவர் பிள்ளையார்.
 
விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட் களுக்குள் பெரும் தத்துவம் அடங்கி இருக்கிறது. அது  என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கை வளமாகும்.
 
மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப் படுகிறது.
 
கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படு  கிறது.
 
அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :