ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By Sasikala

தமிழரின் பண்பாடுகள் மணக்கும் இனிய பொங்கல் பண்டிகை

தைப்பொங்கல் தை மாதம் முதல்நாள் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.


 
 
கடின உழைப்பின் அறுவடைக் காலத்தே, வயல் செழிக்கவும், வாழ்வு செழிக்கவும் அருள்பாலிக்கும் சூரியனை வணங்கி, வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில், உழைப்பின் பலனை நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் ஒரு விவசாயிக்கான நாளாயன்றி, மண்ணை நம்பியும் வானை நம்பியுமே வாழ்ந்த முன்னைத் தமிழனின் வழித்தொடராய் முழுத்தமிழனின் திருநாளே 
 
தைப்பொங்கல் நன்நாள்.
 
தைப்பொங்கல் அன்று மாவிலை தோரணம் கட்டி, மாக்கோலம் இட்டு, மண்பானை வைத்து பொங்கலிட்டு, ஊற்றார் உறவினரோடு, உண்டு மகிழ்வார்கள்.
 
சூரிய நாராயண பூஜை
 
இந்திர விழா என்ற பெயரில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை வழிபட்டனர். ஆகவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை செய்தனர் . இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான்.

கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.
 
இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாட்டை(போகி பண்டிகை) ஆயர்கள் கொண்டாடினர். 
 
தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். 
 
அதன் மறுநாள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு) விழாவை கொண்டாடினர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.