1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2015 (17:42 IST)

விஏஓ பணிக்கு டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கு  இணைய வழி மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்(14.12.15) என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


 

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 31.12.2015 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
 
அறிவிக்கை எண். 19/2015
 
தேதி: 12.11.2015
 
பதவி: கிராம நிர்வாக அலுவலர்
 
காலியிடங்கள்: 813
 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
 
கல்வித் தகுதி: 12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.
 
கட்டணம் விவரம்: நிரந்தரப்பதிவுக் கட்டணம்: ரூ.50. தேர்வுக் கட்டணம்: ரூ.75.
 
இணையதளம் வழி விண்ணப்பிப்தற்கான கடைசி நாள்: 31.12.2015
 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இடஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தேர்வு செய்யப்படும்.
 
இந்த பணிக்கான எழுத்துத் தேர்வு 14.02.2016 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்
 
இதுகுறித்து மேலும், விபரங்கள் அறிய  www.tnpsc.gov.in அல்லது www.exams.net என்ற இணையதளத்தை பார்க்கலாம்.