1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 4 ஜூலை 2022 (14:38 IST)

காலரா ஏற்படுவதற்கான காரணங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் !!

Cholera
காலரா என்பது சிறுகுடலில் ஏற்படும் ஒரு கடுமையான தொற்று ஆகும், இது வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாந்தி ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.


விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவால் காலரா நோய் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் மலத்தில், மாசுபடுத்தப்பட்ட உணவு மற்றும் தண்ணீரில் இது காணப்படுகிறது.

அசுத்தமான தெருவோர வியாபாரிகளால் விற்கப்படும் உணவுப் பொருட்கள். மனித மலம் கலந்த அசுத்தமான தண்ணீரில் விளையும் காய்கறிகளை உட்கொள்வது போன்றவற்றால்  காலரே ஏற்பட வாய்ப்புள்ளது.

மனித மலம் அல்லது அசுத்தமான தண்ணீரால் அசுத்தமான மீன் மற்றும் கடல் உணவுகளை உட்கொள்வது. மக்கள் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சரியாகக் கழுவாதபோது, விப்ரியோ காலரே பாக்டீரியா பரவக்கூடும். போன்ற  காரணங்களால்  காலரே ஏற்பட வாய்ப்புள்ளது.

நீரை எப்போதும் காய்ச்சிக் குடிக்க வேண்டும். காய்ச்சிக் குடிப்பதென்றால், நீர் சூடாகும் அளவுக்கு மட்டுமல்ல. நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் பருக வேண்டும்.

தொடக்க நிலையில் வீட்டிலேயே, ஓ.ஆர்.எஸ் எனப்படும், உப்புக்கரைசல் (சோடியம்) வழங்குவது நீரிழப்பைத் தடுக்கும். பெரும்பாலான நேரங்களில் இந்த ஓ.ஆர்.எஸ். முறை மூலமே சரி செய்ய முடியும்.

பழங்களை குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகளை கழுவி பயன்படுத்தும்போதும் கூட வெந்நீரை பயன்படுத்துவது சிறந்தது.

காலரா அறிகுறிகள்: காய்ச்சல், நா வறட்சி, உடலில் நீரிழப்பு ஆகியவை காலராவின் பொதுவான அறிகுறிகள்.     தொடர் வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு. வயிற்றுப்போக்கு. இவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.

வயிற்றுப்போக்கு, வாந்தி,  காய்ச்சல் ஆகியவை காலராவின் சாதாரண நிலைக்கான அறிகுறிகள். காலராவில் சாதாரண நிலை, தீவிர நிலை, அதி தீவிர நிலை என்று மூன்று வகைகள் உண்டு.

காலரா நீரிழப்பை ஏற்படுத்துவதால், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் உப்புகளை மாற்றும் திரவங்களை உட்கொள்ளலாம். ஒரு நோயாளிக்கு நாள் முழுவதும் தண்ணீர், சோடா மற்றும் தேங்காய் தண்ணீர் நிறைய கொடுக்க வேண்டும்.

ஒருவேளை காலரா வந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. முதலில் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின்றி எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளக்கூடாது.