1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (14:00 IST)

இந்தியாவின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றான தீபாவளி!!

தீபாவளி பண்டிகை இந்தியாவின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். அனைவராலும் பிரியமுடன் கொண்டாடப்படும் சிறப்பான ஒரு  பண்டிகையாகும்.

 
ஐந்து தினங்கள் வரை கொண்டாடும் இப்பண்டிகையின் நோக்கம் அறியாமை இருளைப் போக்கவும், தீயதை நீக்கி நல்லதை ஏற்கவும்,  வாழ்வில் நம்பிக்கையூட்டவும், ஆன்மீக ஒளி தீபத்தை ஏற்றும் முகமாக கொண்டாடப்படுகிறது.
 
தீய குணத்தை எரித்துவிட வேண்டும். தீபத்தில், தீப ஒளியில், ஜீவான்மா வாசம் செய்ய அருள் பெறுவதுதான் ஐதீகத்தோடு  கொண்டாடுகின்றனர்.
 
தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து புனித நீராடுகின்றனர். சிலர் அதற்கு முன் இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு இட்டு மகிழவர். நல்லெண்ணெய்யில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம்.
 
தீபவளியன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவை, விலங்குகளின் நலன் கருதி சில பகுதிகளில் பட்டாசு  இல்லா திருநாளாகக் கொண்டாடியும் வருகின்றனர்.