திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (12:02 IST)

டீக்கடையில் புகுந்த பாம்பு பயந்து ஓடிய வாடிக்கையாளர்கள்

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் பாஸ்கர் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் காலை 9 மணி அளவில் வழக்கம்போல் டீ போட்டுக் கொண்டிருந்தார். 
 
அப்பொழுது பாஸ்கர் நின்று கொண்டிருந்த இடத்தில் காலில் ஏதோ ஊர்வது போன்று தெரிந்துள்ளது சுதாரித்துக்கொண்ட பாஸ்கர் உடனடியாக கீழே குனிந்து பார்த்தபோது சுமார் 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று  காலில் ஏறி ஓரமாகப் போய் படுத்துக் கொண்டது உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் டீக்கடையின் கதவை அடைத்து பாம்பு வெளியே சென்றுவிட அளவிற்கு பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். 
 
பாம்பை உயிருடன் பிடிக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை பின் பாம்பை அடித்து பாம்பை வெளியே எடுத்தார்கள் கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு என தெரியவந்தது நல்வாய்ப்பாக சுதாரித்துக் கொண்ட பாஸ்கர் பாம்பு கடியிலிருந்து தப்பினார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.