வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Arun Prasath
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (18:55 IST)

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரம்; விடைத்தாள்கள் காரில் எடுத்துச் செல்ல உதவியவர் கைது

கோப்புப்படம்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் விடைத்தாள்களை அரசு வாகனத்தில் இருந்து காரில் ஏற்றிச்செல்வதற்கு உதவியதாக மரிய லிஜோஸ்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் பலரும் கைது செய்யப்பட்டுவரும் நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் சரணடைந்தார். அவர் முறைகேடு செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் விடைத்தாள்களை அரசு வாகனத்தில் இருந்து மாற்றி காரில் எடுத்துச் செல்ல உதவிய மரிய லிஜோஸ்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.