செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (11:37 IST)

சென்னையில் ஷிவ் நாடார் பள்ளி தொடக்கம்!

12.1 பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள HCL என்ற உலகளாவிய முன்னணி பெரு நிறுவனத்தின் நிறுவனர் திரு. ஷிவ் நாடாரின் அறச்செயல் நடவடிக்கை பிரிவான ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் அதன் பிரபலமான K-12 ஸ்கூல் சங்கிலித்தொடர் சென்னை மாநகரில் ஷிவ் நாடார் ஸ்கூல் என்ற பெயரில் தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது.

பாரம்பரிய மதிப்பீடுகள் மற்றும் கலாச்சாரத்துடன் ஒரு நவீன கண்ணோட்டத்துடன்கூடிய சர்வதேச பள்ளியாக திகழ்வதே இதன் குறிக்கோளாகும். கல்வி மீது இந்த ஃபவுண்டேஷன் கொண்டிருக்கும் மிக ஆழமான பொறுப்புறுதியை இத்தொடக்கத்தின் மூலம் மீண்டும் உறுதிசெய்திருக்கும் இப்பள்ளி, இன்டர்நேஷனல் பக்காலோரியேட் (IB) போர்டு உடன் இணைக்கப்பட்டதாக இயங்கும்.

இளம் மாணவர்களின் முழுமையான உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு உலகத்தரத்திலான கல்வியை இப்பள்ளி வழங்கும். கல்வி செயல்பாடுகள் தொடங்கும் முதல் ஆண்டில் ஏறக்குறைய 150 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் மற்றும் பள்ளிச்சேர்க்கையின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும்.

நர்சரி வகுப்பிலிருந்து 4-ஆம் வகுப்பு வரையிலான புதிய கல்வி அமர்வு 2023 ஜுன் மாதத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றும் இதற்கான பதிவு செயல்முறை விவரங்கள் https://shivnadarschool.edu.in/chennai/ என்ற இணையதளத்தில் கிடைக்கப்பெறுகின்றன.

பள்ளியின் முதன்மையான சிறப்பம்சங்கள்: 
  • விருதுவென்ற கட்டிடக்கலை நிபுணரான வாஸ்து ஷில்பா கன்சல்டன்ட்ஸ் வடிவமைப்பில் 14 ஏக்கர் பரப்புடன் பசுமையான வளாகம்.
  • இன்டர்நேஷனல் பக்காலோரியேட் (IB) போர்டு உடன் இணைந்ததாக இப்பள்ளி செயல்படும்
வசதியம்சங்கள்
  • ஸ்பிலாஷ் நீச்சல் குளம், நூலகம், உணவருந்தல் கூடம், கலையரங்கம், திறந்தநிலை ஆம்பிதியேட்டர், நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம்.
  • மிக நவீன அறிவியல் ஆய்வகம், விளையாட்டு பகுதி, காட்சிக் கலை, நிகழ்கலை ஆகிய இரு கலை வடிவங்களின் பல்வேறு அம்சங்களை ஆராயும் வசதிகள், பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகம், தடகள விளையாட்டுகளுக்கான  மைதானம் மற்றும் கால்பந்தாட்டம் போன்ற கள விளையாட்டுகள் மற்றும் பல்வேறு காட்சி அரங்கங்கள் ஆகியவையும்இங்குஇடம்பெறுகின்றன.
     
ஷிவ் நாடார் பள்ளியின் தலைவரும், ஷிவ் நாடார் ஃபவுண்டேஷனின் அறங்காவலருமான திரு. ஷிக்கர் மல்ஹோத்ரா இது பற்றி கூறியதாவது: “திரு. ஷிவ் நாடார் பிறந்த தாயகமாக இது இருப்பதால் தமிழ்நாடு எப்போதுமே சிறப்பானது; எனவே ஒரு சர்வதேச பள்ளியை தொடங்குவதற்கு ஒரு உகந்த அமைவிடமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டிருப்பதும் வியப்பில்லை. நீண்டகாலம் நிலைக்கிறவாறு மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஆக்கபூர்வ தாக்கத்தைத் தொடர்ந்து வழங்குகிறவாறு கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற ‘ஆக்கபூர்வ அறச்செயல்’ (Creative Philanthropy) என்ற கோட்பாட்டை ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

சென்னை மாநகரில் உயர்கல்விக்கான இரு கல்வி நிறுவனங்களை ஏற்கனவே நாங்கள் தொடங்கி சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். எனவே, K-12-ஆம் வகுப்பு வரையிலான கற்றல் பயணத்தை ஒருங்கிணைப்பதில் இதுவொரு இயற்கையான படிநிலையாகவே இருக்கிறது. டெல்லி-என்சிஆர் பகுதியில் மூன்று ஷிவ் நாடார் பள்ளிகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்திவரும் நிலையில் சென்னை மாநகரில் அதன் நான்காவது பள்ளியை தொடங்குவது எங்களுக்கு பெருமிதத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.”

ஷிவ் நாடார் பள்ளியின் தலைமை செயல் அலுவலர் கர்னல் கோபால் கருணாகரன் (ஓய்வு) பேசுகையில், “சென்னையில் ஷிவ் நாடார் பள்ளியை தொடங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஒரு முழுமையான கற்றல் அனுபவத்தை இங்கு நாங்கள் மாணவர்களுக்கு வழங்குவோம்; கல்விசார்ந்த நேர்த்தி நிலையானது, இசை, நாடகம், நடனம் மற்றும் காட்சி கலை போன்ற கலைகளின் செயலாக்கம், விளையாட்டில் நேர்த்தி, பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் மற்றும் செயல்திட்ட அடிப்படையிலான கற்றல் மற்றும் தலைமைத்துவ பண்பு ஆகியவற்றோடு ஒருங்கிணைக்கப்படும் அமைவிடமாக இப்பள்ளி செயல்படும். நுண்ணறிவு, விவேகம், சமூக மற்றும்

உணர்வு ரீதியில் சமநிலை கொண்ட நாளைய சிறந்த குடிமக்களை உருவாக்குவதற்கான அனைத்து அத்தியாவசிய அம்சங்களும் ஒருங்கிணைந்த கலவையாக இக்கல்வி இருக்கும். புதுயுக, முற்போக்கான கல்விசார் வழிமுறைகளின் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை உள்ளடக்கிய ஒரு கற்றல் சமூகத்தை உருவாக்குவதை எமது பள்ளியின் செயல்நடைமுறைகள் குறிக்கோளாக கொண்டிருக்கும். இங்கு இடம்பெறவுள்ள சர்வதேச கல்வி பாடத்திட்டம், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மிகச்சிறந்த கல்வியாளர்களால் முன்னெடுக்கப்படும் மற்றும் மிகச்சிறப்பான கல்விசார் உட்கட்டமைப்பு வசதிகளின் ஆதரவோடு இப்பள்ளி இயங்கும். கடந்த பத்தாண்டுகளுக்கும் அதிகமாக டெல்லி-என்சிஆர் பகுதியில் இயங்கிவரும் எமது மூன்று பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் கற்றல் முறையியல்களிலிருந்து சென்னையில் தொடங்கப்படும் ஷிவ் நாடார் பள்ளி அனுபவரீதியிலான ஆதாயத்தைப் பெறும்,” என்று கூறினார்.

பள்ளி வளாகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள்: பிரபல எலியட்ஸ் கடற்கரை மற்றும் அடையார் ஆறுக்கு அருகே பச்சை பசேளென்ற 14-ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மிகப்பெரிய அமைவிடத்தில் இப்பள்ளி அமைகிறது. இதன் மரங்கள் அடர்ந்த பசுமை போர்வைக்காக சென்னையில் இந்த அமைவிடம் பலராலும் நன்கு அறிந்த இடமாக இருக்கிறது; இங்குள்ள சூழலியல் சமநிலை எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சாத்தியமுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் இப்பள்ளி எடுத்து வருகிறது;

அதுமட்டுமன்றி இன்னும் அதிக மரங்கள் மற்றும் தாவரங்களை வளர்த்து இன்னும் மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சூழலியல் அடிப்படையில் நிலைப்புத்தன்மையிலுள்ள கட்டிடங்களை வடிவமைப்பதற்கு புகழ்பெற்றவரும், பத்மபூஷன் விருது வென்றவருமான திரு. பி. வி. தோஷி அவர்களால் நிறுவப்பட்ட நிறுவனமான வாஸ்து ஷில்பா கன்சல்டன்ஸ் என்ற கட்டிடக்கலைக்காக விருதுவென்ற கட்டிடக்கலை நிபுணர்களால் இப்பள்ளி வடிவமைக்கப்படுகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கு ஆராய்ந்து அறியும் ஆர்வமிக்க உணர்வு, இயற்கையின் மீது நேசம் மற்றும் சமூக உருவாக்கலுக்கான இசைவான சூழல் ஆகியவற்றை ஏதுவாக்க இப்பள்ளி வளாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இளம் மாணவர்கள், இடைநிலை மாணவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வெவ்வேறு பிரிவுகளுக்கு தனித்தனி பகுதிகளை கொண்டிருக்கும் இப்பள்ளி, நிலைப்புத்தன்மையுள்ள மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் ஒரு பசுமை வளாகமாக திகழும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மிக நவீன அறிவியல் ஆய்வகம், விளையாட்டு பகுதி, காட்சிக் கலை, நிகழ்கலை ஆகிய

இரு கலை வடிவங்களின் பல்வேறு அம்சங்களை ஆராயும் வசதிகள், பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகம், தடகள விளையாட்டுகளுக்கான  மைதானம் மற்றும் கால்பந்தாட்டம் போன்ற கள விளையாட்டுகள் மற்றும் பல்வேறு காட்சி அரங்கங்கள் ஆகியவையும் இவ்வளாகத்தில் இடம்பெறுகின்றன. ஸ்பிலாஷ் நீச்சல் குளம், நூலகம், உணவருந்தல் கூடம், கலையரங்கம், திறந்தநிலை ஆம்பிதியேட்டர், நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவையும் இங்கு அமைகின்றன. மிக நவீன வசதிகளுடன் ஒரு முழு அளவிலான K-12 சர்வதேச பள்ளி வளாகம் 2024-ஆம் ஆண்டுக்குள் இங்கு தயாராகிவிடும்.

ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன், 2012-ஆம் ஆண்டில் K-12 நகர்ப்புற தனியார் பள்ளிக்கல்வி துறைக்குள் முதன்முறையாக கால்பதித்தது; இப்போது ஃபரிதாபாத், நொய்டா மற்றும் குருகிராம் என டெல்லி-என்சிஆர் பிராந்தியத்தில் மூன்று பள்ளிகளை இது தற்போது நடத்திவருகிறது. என்சிஆர் பிராந்தியத்தில் முதன்மையான பள்ளிகள் பட்டியலில் ஷிவ் நாடார் பள்ளியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவ் நாடார் பள்ளி குறித்து
ஷிவ் நாடார் பள்ளி என்பது, கல்விசார் நேர்த்தியையும், வாழ்நாளுக்கான கல்வியையும் வழங்குவதற்கென K12 தனியார் கல்வித்துறையில் ஷிவ் நாடார் ஃபவுண்டேஷனால் தொடங்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற முனைப்புத் திட்டமாகும். என்சிஆர் பிராந்தியத்தில் மூன்று வளாகங்களைக் கொண்டிருக்கிற ஷிவ் நாடார் பள்ளி, தங்களது திறமைகளையும், திறன்களையும் கண்டறிவதற்கு அவர்களுக்கு சவால்களை முன்வைக்கிற ஒரு உகந்த சூழலை மாணவர்களுக்கு வழங்குகிறது. சமுதாயத்தின் குறிக்கோள் கொண்ட, நன்னெறி சார்ந்த மரியாதைமிக்க, மகிழ்ச்சியான குடிமக்களாக அவர்களை வளர்த்து உருவாக்குவது இப்பள்ளி கல்வியின் நோக்கமாகும். 5050 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆகியோரோடு சிறந்த கல்வியை கற்பிக்கும் 600 கல்வியாளர்கள் / ஆசிரியர்களும் ஷிவ் நாடார் பள்ளி என்ற பெரும் குடும்பத்தின் அங்கமாக இருக்கின்றனர்.