ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (08:48 IST)

ஜிம்பாவே அணியை பந்தாடிய அயர்லாந்து!

அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்த நிலையில் இந்த போட்டியில் அயர்லாந்து அணி ஜிம்பாவே அணியை பந்தாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 34 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாவே கேப்டன் எர்வின் மட்டும் 57 ரன்கள் எடுத்திருந்தார்.
 
இந்த நிலையில் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய அயர்லாந்து அணி 22.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது
 
இதனை அடுத்து போட்டி டக்வொர்த் லீவீஸ் முறையில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. இதில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது என்பதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது