இந்திய அணியில் தோனி நீடிப்பாரா? யுவராஜ் பளிச்!
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி நீடிப்பாரா மாட்டாரா என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பதில் அளித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், தற்காலிக ஓய்வில் இருக்கும் தோனி அடுத்து போட்டிகளில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அவரது ஓய்வு குறித்தும் அவ்வப்போது வதந்திகள் வெளியாகி வண்ணமே உள்ளன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனி நீடிப்பாரா என யுவ்ராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர், செய்தியாளர்களாகிய தாங்கள், நமது மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தேர்வாளர்களிடம்தான் இதுபற்றி கேட்க வேண்டும்.
நமது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவுக்கு, நல்ல தேர்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது சிக்கலான வேலை என்றாலும், நவீனத்துவ கிரிக்கெட் குறித்து அவர்களது யோசனை கேள்விக்குறிதான் என்று யுவராஜ் பதிலளித்துள்ளார்.