1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (13:27 IST)

ஐபிஎல் டிஜிட்டல் உரிமத்திற்கு போட்டிப்போடும் யூட்யூப்! – ஃப்ரீயா லைவ் போடுவீங்களா?

2023 முதல் நடைபெறும் ஐபிஎல் தொடர் போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமத்திற்கான டெண்டரில் யூட்யூப் நிறுவனமும் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் விமரிசையாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் இணைந்ததால் அணிகளிம் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கி ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் முடிந்துவிடும் நிலையில் இந்த முறை இரண்டு மாதங்களாக ஐபிஎல் தொடர் நடைபெற்றது.

ஐபிஎல் தொடர் போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்த நிலையில், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றிருந்தது.

இந்நிலையில் அடுத்த 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கி 2027ம் ஆண்டு வரை 5 ஐபிஎல் சீசன்களையும் டிஜிட்டலில் ஒளிபரப்புவதற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த டெண்டரில் டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் பிரபல வீடியோ ப்ளாட்பார்மான யூட்யூப் நிறுவனமும் இந்த டெண்டரில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லா வீடியோவையும் இலவசமாக காட்டும் யூட்யூப் ஐபிஎல்லையும் இலவசமாக காட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.