புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (13:59 IST)

பயிற்சியாளர் பதவியை தொடர்வாரா ராகுல் டிராவிட்?

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறி வருகிறது.

ஆனால் இப்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத்  தவறவிட்டது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அவர் தொடர்ந்து பயிற்சியாளராக தொடர்வாரா இல்லை விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் அதுவரை டிராவிட் பதவியில் நீடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.