ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (17:30 IST)

நம் வீரர்களை மரியாதையோடு நடத்த வேண்டும்… கோலி, ரோஹித் குறித்து ஜெய் ஷா!

இந்திய அணிக்கு அடுத்த 35 நாட்களுக்கு எந்தவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த இந்திய அணிக்கு இது ஓய்வு காலமாக அமைந்துள்ளது.

இந்த இடைவேளை  இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள துலிப் கோப்பை தொடரில் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்துகொள்ளுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “நம் வீரர்களை உள்ளூர் போட்டிகளில் விளையாடச் சொல்லி அவர்களின் பனிச்சுமையை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை. அப்படிச் செய்தால் அவர்கள் காயமடைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. நம் வீரர்களை அடிமைபோல நடத்தாமல் மரியாதையுடன் நடத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.