திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (17:05 IST)

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் – இந்த இரு வீரர்களால் சுவாரஸ்யமாக இருக்கும்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இரு வீரர்களால் சுவாரஸ்யமாக இருக்கும் என பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை. அதே போல கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் ‘இந்திய அணியில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இரு வீரர்கள் உள்ளதால் டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ளது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களால் அணி பலமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.