வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2023 (07:29 IST)

ஒரு வழியா பிரச்சன முடிஞ்சுதுப்பா… விராட் கோலியுடன் சமாதானம் ஆன நவீன் உல் ஹக்!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலியும், ஆப்கன் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக்கும் மோதலில் ஈடுபட்டனர். இதில் கௌதம் கம்பீர் உள்ளே வர பிரச்சனை பெரிதானது. அதனால் இந்திய அணி ரசிகர்கள் நவீன் உல் ஹக் மற்றும் கம்பீரை பயங்கரமாக கேலி செய்து வந்தனர்.

நவீன் உல் ஹக் விளையாடும் போட்டிகளில் “கோலி கோலி” என கத்தி அவருக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டியிலும் நவீன் உல் ஹக் பேட் செய்ய வந்த போதும், பந்து வீசிய போதும் “கோலி கோலி” என ஆர்ப்பணித்தனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கோலி பேட் செய்த போது நவீன் உல் ஹக் அவரிடம் சென்று கைகொடுத்து சமாதானம் ஆனார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.