வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 21 மார்ச் 2015 (16:04 IST)

இலங்கை வீரர் குமார் சங்ககராவின் தொடரும் உலக சாதனைகள்

இலங்கை வீரர் குமார் சங்ககரா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எட்டமுடியாத பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்.
 
நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியோடு ஓய்வுபெற இருப்பதாக சங்ககரா அறிவித்துள்ளார். அவருடைய ஓய்வு இலங்கை அணியினருக்கு மட்டுமல்லாமல் உலகக் கிரிக்கெட்டுக்கும் பேரிழப்பாகும்.
 

 
2000 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான குமார் சங்ககரா இதுவரை 403 ஒருநாள் போட்டிகளில் விளையாடி [25 சதங்கள், 93 அரைச்சதங்கள்] 14, 189 ரன்கள் எடுத்துள்ளார்.
 
அதே ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமானவர் இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி [38 சதங்கள், 51 அரைச்சதங்கள்] 12,203 ரன்கள் எடுத்துள்ளார்.
 
அவரது சாதனைகள் விவரம் கீழே:
 
ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே தொடர்ச்சியான 4 சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 

 
ஒரு உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 3 சதங்களைப் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (2007), இந்தியாவின் சவுரவ் கங்குலி (2003) மற்றும் மார்க் வாக் (1996) ஆகியோர் இந்த சாதனையை புரிந்துள்ளனர்.
 
உலகக்கோப்பை வரலாற்றில அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருமை சச்சின் டெண்டுல்கர் வசமே உள்ளது. அவர் 6 சதங்களை பதிவு செய்துள்ளார். சங்கக்காரவும், ரிக்கி பாண்டிங்கும் 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர். இதை முறியடிக்க இன்னும் இரண்டு சதங்களை சங்ககரா பெற்றால் போதும்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 500 ஆட்டமிழப்புக்களை செய்த முதல் வீரர் என்பதுடன், உலகக்கோப்பை போட்டிகளில், அதிக பேரை ஆட்டமிழப்பு செய்த (52) ஆடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையையும் சங்ககரா முறியடித்தார். இதுவரை 501 பேர் [402 கேட்சுகள், 99 ஸ்டெம்பிட்டுகள்] ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
 

 
டெஸ்ட் போட்டிகளில் சங்ககரா இதுவரை 11 இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார். உலகளவில் இது இரண்டாவது சிறந்த பதிவாகும். டான் பிராட்மேன் 12 இரட்டை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
 
அதுபோல டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக எட்டாயிரம், ஒன்பதாயிரம், 11 ஆயிரம், 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரராக சங்ககரா உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியக 4 போட்டிகளில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
 

 
ஸ்காட்லாந்துடனான போட்டியில் ஆட்டநாயகன் விருதைத் தனதாக்கிய சங்ககராவிற்கு, இது சர்வதேசப் போட்டிகளில் பெற்ற 50ஆவது ஆட்டநாயகன் விருதாகும். அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலும் கூடுதலான போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதுகளைப் பெற்ற வீரர்கள்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் குவித்தவர்கள் பட்டியலில் சங்ககரா உலகளவில் 25 சதங்களுடன் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் (49), ரிக்கி பாண்டிங் (30), சானத் ஜெயசூர்யா (28) ஆகியோர் அதிக சதங்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர்.
 
ஜெயசூர்யாவுடன் சங்ககரா
மேலும், அதிக அரைச்சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 96 அரைச்சதங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சங்ககரா 93 அரைச்சதங்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
 
சச்சின் டெண்டுல்கருடன் சங்ககரா
​அதேபோல ஆ​ஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா 2038 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு வீரர் ஒருவர் ​ஆஸ்திரேலியாவில் ​பெற்ற மூன்றாவது அதிகப்படியான ரன்கள் இவையாகும்.
 
இவருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 3067 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், விவியன் ரிச்சர்ட்ஸ் 2769 ஓட்டங்களுடனும் 2ஆம் இடத்தில் உள்ள நிலையில் சங்ககரா ​இப்போது ​3ஆம் இடத்தை​ப் பெற்றுள்ளார்.