திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (10:51 IST)

விஜய் ஹசாரே கோப்பை… தமிழக அணிக்கு முதல் வெற்றி!

நேற்று தொடங்கிய விஜய் ஹசாரே கோப்பையை தமிழக அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டித் தொடர் நேற்று 6 இடங்களில் தொடங்குகிறது. மொத்தம் 38 அணிகள் கலந்துகொள்ளும் இந்த கோப்பையில் 6 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அணி பி பிரிவில் உள்ளது. சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் தினேஷ் கார்த்திக்கே அணியை தலைமை தாங்குகிறார். முதல் போட்டியில் தமிழ்நாடு அணி பஞ்சாப்பை எதிர்கொண்டு விளையாடியது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசனின் சிறப்பான சதத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை வெற்றிக் கணக்கோடு தொடங்கியுள்ளது தமிழக் அணி.