திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (15:47 IST)

அவர் அணிக்குள் வந்தால் உங்களுக்கு இடம் இருக்காது – ஸ்ரேயாஸ் & ராகுலை எச்சரித்த கவாஸ்கர்!

இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அடுத்த ஆண்டு உலகக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் விளையாடி வருகின்றனர். ஆனால் மிடில் ஆர்டரில் விளையாட ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். மேலும் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் இந்த வரிசையில் உள்ளனர்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கும், கே எல் ராகுலுக்கும் இடையே போட்டி உள்ளது. அதனால் இருவரும் சிறப்பாக விளையாட வேண்டிய அழுத்தம் உள்ளது. ஆனால் இவர்கள் இருவருக்கும் போட்டியாக ஹர்திக் பாண்ட்யா இருப்பார். அவர் மீண்டும் அணியில் வந்தால், இவர்கள் இருவரில் ஒருவருக்குதான் இடம் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.