செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (10:35 IST)

ரிஷப் பண்ட்டை திட்டி தீர்த்த சுனில் கவாஸ்கர்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிக மோசமாக விளையாடி வருகிறார்.

தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதுமே அவசரப்பட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார் பண்ட். அதிலும் நேற்றைய ஆட்டத்தில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு அதனால் டிரிகர் ஆகி ரபாடாவின் பந்தை இறங்கி அடிக்க முயன்று மிகவும் மோசமாக தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘நான் சென்ஸ். அவர் இயல்பான அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடினார் என்று இன்னும் எத்தனை நாளுக்கு அர்த்தமற்று பேசப்போகிறார்கள். ரிஷப் பண்ட் என்றைக்கு சென்ஸிபிளாக ஆடப்போகிறார்’ என்ற கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.