செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (13:25 IST)

சதம் வீழ்த்திய சுப்மன் கில்.. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா ஏறுமுகம்!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் நடந்து வரும் நிலையில் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார்.



இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. அதை தொடர்ந்து நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட்டில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இந்திய இளம் விரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த நிலையில் அணியின் மொத்த ஸ்கோர் 396 ஆக இருந்தது. அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி இந்த இலக்கை எட்டுவதற்கு இந்திய அணி பந்துவீச்சாளர்களால் விக்கெட்டை இழந்தது. பும்ரா அசால்ட்டாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்து வரும் நிலையில் ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தார். எனினும் மற்றுமொரு இளம் வீரரான சுப்மன் கில் நின்று நிதானமாக விளையாடி சதம் அடித்துள்ளார். தொடர்ந்து இரட்டை சதம் நோக்கி பயணிப்பாரா என ரசிகர்கள் காத்துள்ள நிலையில் இந்திய அணி 203 ரன்களுக்கு 4 விக்கெட் இழப்புடன் முன்னேறிக் கொண்டுள்ளது.

Edit by Prasanth.K