செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (09:43 IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்… ஆஸி அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை ஆஸி அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதையடுத்து விரைவில் ஒருநாள் தொடரில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் இடையில் தாயாரின் மரணத்துக்காக இந்தியாவில் இருந்து திரும்பினார் பேட் கம்மின்ஸ். அதனால் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்தினார்.

இந்நிலையில் வரும் வெள்ளியன்று தொடங்கும் ஒருநாள் தொடரிலும் பேட் கம்மின்ஸ் இடம்பெறாததால் ஸ்டீவ் ஸ்மித்தே கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் இப்போது ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸி அணி விவரம்:-

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா