புதன், 13 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2024 (09:21 IST)

ஸ்மிருதி மந்தனாவை பாக்கணும்! கஷ்டப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி சிறுமி! - ஸ்மிருதி கொடுத்த ஆச்சர்யம்!

Smiriti Mandanna

இலங்கையில் நடந்து வரும் ஆசியக்கோப்பை பெண்கள் உலகக்கோப்பை போட்டியை காண வந்த மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ஸ்மிருதி மந்தனா கொடுத்த பரிசு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2024ம் ஆண்டிற்கான ஆசியக்கோப்பை பெண்கள் உலகக்கோப்பை டி20 போட்டிகள் இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 19) தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய பெண்கள் அணி ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் களம் இறங்கியுள்ளது.

முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு பாகிஸ்தானை மடக்கி, சேஸிங்கில் 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. 4 ஓவரில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி சர்மா ஆட்டநாயகியாக தேர்வானார்.

இந்த ஆசியக்கோப்பை போட்டியை காண அதீஷா ஹெரத் என்ற மாற்றுத்திறனாளி சிறுமி தனது சக்கர நாற்காலியிலேயே மைதானத்திற்கு வந்திருந்தார். அவர் அவரது ஃபேவரைட் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவை காண அவ்வளவு தூரம் வந்திருந்தார். அவரை கௌரவிக்கும் விதமாக ஸ்மிருதி மந்தனா அவரது கையாலேயே புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை சிறுமிக்கு பரிசாக அளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K