வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (17:46 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஷ் அய்யர் விலகல்?

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஷ் அய்ய விலக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
 

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் வரும் 9 ஆம் தேதி  நாக்பூரில் நடக்கவுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணியினி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஷ் அய்யர் விளையாடமாடார் என்ற தகவல் வெளியாகிறது.

சமீபத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டிகளில் காயம் காரணமாக விலகியவர்,  இன்னும் காயம் குணமடையவில்லை. எனவே, அவர், இரண்டாவது டெஸ்டில் அவர் உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.