புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (13:14 IST)

நான் கோலியாக இருந்திருந்தால் அதை பண்ண மாட்டேன்! – சோயப் அக்தர் சர்ச்சை கருத்து!

நான் கோலியாக இருந்தால் திருமணம் செய்ய மாட்டேன் என சோயப் அக்தர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான சோயப் அக்தர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தனக்கென ஒரு யூட்யூப் சேனல் தொடங்கி தொடர்ந்து கிரிக்கெட் குறித்து தனது கருத்துகளை பேசி வருகிறார். கடந்த சில போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக கோலியின் செயல்பாடுகள் விமர்சனத்திற்குள்ளன நிலையில் அவர் கேப்டன் பதவிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் கோலி குறித்து பேசியுள்ள சோயப் அக்தர் “நான் கோலியாக இருந்திருதால் விளையாடும் நாட்களில் திருமணம் செய்திருக்க மாட்டேன். ரன்களை குவித்து எனது விளையாட்டை ரசித்திருப்பேன். நான் திருமணத்திற்கு எதிரானவன் அல்ல. இன்றைய காலகட்டத்தில் முடிந்தவரை சிறிய பொறுப்புடன் களத்தில் இறங்குவது நல்லது” என்று பேசியுள்ளார்.

விராட் கோலி கிரிக்கெட்டில் சிறந்து விளங்க முடியாததற்கு அவர் திருமணம் செய்ததே காரணம் என்ற வகையில் சோயப் அக்தர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.