அறிமுக போட்டியிலேயே கலக்கிய ஷிவம் மாவி!
நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் தீபக் ஹூடா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியைக் கரைசேர்த்தனர்.
இதையடுத்து ஆடிய இலங்கை அணி இலக்கை துரத்திய நிலையில் கடைசி ஓவர் வரை ஆட்டம் பரபரப்பாக சென்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அறிமுகம் ஆன இந்திய அணி வீரர் ஷிவம் மாவி அறிமுகப் போட்டியிலேயே முத்திரைப் பதிக்கும் விதமாக பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 22 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.