”நான் பார்த்த மிகச்சிறந்த ODI இன்னிங்ஸ்”… மேக்ஸ்வெல்லை புகழ்ந்த சச்சின்!
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று மும்பையில் நடந்த போட்டி, இந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்து வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்த போட்டியில் ஆஸி அணியின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் சேர்த்து நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸை ஆடி ஆஸி அணியை வெற்றிப்பெற வைத்தார். அவரது இன்னிங்ஸில் 21 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடக்கம்.
இந்நிலையில் மேக்ஸ்வெல்லின் இந்த இன்னிங்ஸை புகழ்ந்துள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் “max அழுத்தத்தில் இருந்து max பெர்பாமன்ஸ். இதுதான் நான் என் வாழ்நாளில் பார்த்த மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்” என சிலாகித்துள்ளார்.