வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (11:01 IST)

இப்படி ஒரு ஆட்டத்தை நான் பாத்ததே இல்ல! – சச்சினுக்கு ஷாக் குடுத்த பூரன்!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்ற நிலையில், அந்த ஆட்டம் குறித்து சச்சின் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

நேற்று கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணிக்கும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 226 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாதனை புரிந்தது. கிங்ஸ் லெவனின் 223 என்ற இமாலய இலக்கை 4 விக்கெட்டுகள் 3 பந்துகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய ரன் சேஸிங் செய்யப்பட்ட ஆட்டமாக இது மாறியுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸரை கிங்ஸ் லெவன் அணியின் பூரன் பவுண்டரி லைனில் பிடிக்க முயற்சித்தார். பவுண்டரி லைனை தாண்டி பறந்து சென்ற அவர் சிக்ஸர் போன பந்தை பிடித்து மைதானத்திற்குள் வீசியபடி கீழே விழுந்தார். இதனால் சாம்சனின் சிக்ஸர் தடுக்கப்பட்டு ஓடிய ரன்கள் இரண்டு மட்டுமே கிடைத்தது.

பூரன் பவுண்டரியில் பந்தை தடுத்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் “என் கிரிக்கெட் வாழ்நாள் அனுபவத்தில் முதன்முறையாக இப்படியொரு சம்பவத்தை பார்க்கிறேன். அசாத்தியமான முயற்சி” என கூறியுள்ளார்.