திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 மே 2020 (18:25 IST)

டி 20 போட்டிகளில் இரட்டை சத வாய்ப்பை தவறவிட்டேன்! ஹிட்மேன் வருத்தம்!

உலகிலேயே ஒருநாள் போட்டிகளில் மூன்றுமுறை இரட்டை சதம் அடித்த சாதனையை பெற்றுள்ள ரோஹித் ஷர்மா இருபது ஓவர் போட்டிகளிலும் அந்த சாதனையை தவறவிட்டதாகக் கூறியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க முடியுமா என்பதே கேள்வியாக இருந்த நிலையில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இருபது ஓவர் போட்டிகளிலும் அந்த வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும் அதை தவறவிட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கக்கு எதிரான டிசம்பர் 2017-ல் நடந்த போட்டியில் ரோஹித் 43 பந்துகளில் 117 ரன்கள் சேர்த்தார். அவர் அவுட் ஆகும் போதும் மீதம் 7 ஓவர்கள் இருந்தன. அதுகுறித்து இன்ஸ்டாகிராம் உரையாடலில் பேசிய அவர் ‘அன்று எனக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை நான் தவறவிட்டு விட்டேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.