ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 4 மே 2024 (11:50 IST)

ஐபிஎல் திருவிழாவில் இன்று குஜராத்தை எதிர்கொள்ளும் ஆர் சிபி.. ஆறுதல் வெற்றி யாருக்கு?

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 48 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்  ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று நடக்கும் 52 ஆவது லீக் போட்டியில் ஆர் சி பி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ளன. அதனால் இன்றைய போட்டி டாப் நான்கு அணிகளைப் பாதிக்கப் போவதில்லை.

ஆனாலும் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது. கடந்த இரண்டு போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளது ஆர் சி பி அணி. அதனால் சொந்த மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டி அவர்களுக்கு நேர்மறையான அம்சமாக இருக்கும்.