செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (15:32 IST)

நான் தோனியோடு ரோஹித்தை ஒப்பிடுவேன்… அதைவிட சிறந்த கௌரவம் அவருக்கு இல்லை – ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட்டில் உருவான மிகச்சிறந்த கேப்டனாகவும் கிரிக்கெட்டராகவும் தோனி உள்ளார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது.

இந்நிலையில் ரவி சாஸ்திரி ரோஹித் ஷர்மாவை தோனியோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். அவரது பேச்சில் “நான் இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக தோனியோடு ரோஹித் ஷர்மாவையும் சொல்வேன். இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்று கேட்டால் நான் இருவரையுமே சொல்வேன். அதுவே ரோஹித் ஷர்மாவுக்கு மிகப்பெரிய கௌரவமாகும். ஏனென்றால் தோனி இந்திய அணிக்காக எத்தனை கோப்பைகளை வென்றுள்ளார் என்பதை நாம் அறிவோம்” எனப் பேசியுள்ளார்.