திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2023 (09:29 IST)

ஆர் சி பி அணிக்கு பெரும் பின்னடைவு… ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முக்கிய வீரர்!

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ரஜத் படிதார், சிறப்பாக விளையாடி அசத்தினார். ப்ளே ஆஃபில் சதமடித்துக் கலக்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் ஆர் சி பி அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காயம் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது காயம் சரியாகாததால், ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் தெரிகிறது.