1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (23:00 IST)

கிண்டல் செய்தவர்களுக்கு இந்திய வீரர் ரஹானே பதிலடி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள்  நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணி வீரர் ரஹானே சிறப்பாக விளையாடினார்.

இந்நிலையில் தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் சூடாகப் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: என்னைக் கேலி செய்தவர்கள்ல், என்னைக் கிண்டல் செய்து ஏளனம் செய்தவர்கள், என் மனதைக் காயம் செய்தவர்கள் அனைவருக்கும் என்னுடைய பேக் டூ தி ஃபார்ம் ஒரு நல்ல பதிலாக இருக்கும் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஹானே மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.