வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:24 IST)

இன்றைய போட்டியில் யாருக்கு வாய்ப்பு… ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இடம்பெறுவாரா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடக்க உள்ளது.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. இன்றைய போட்டியில் பலம் மிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஜடேஜா விளையாடமாட்டார் என்பதால் அவருக்கு பதில் யாரை சேர்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்குப் பதில் பந்துவீச்சாளர் ஒருவரை சேர்ப்பார்களா அல்லது அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அணிக்குள் கொண்டு வரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உத்தேச அணி

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்/தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான்/ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்