புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:03 IST)

மாட்டிறைச்சிக்கும் பன்றி கறிக்கும் தடை... பிசிசிஐ புதிய உணவு கட்டுபாடு?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இனி மாட்டிறைச்சி மற்றும் பன்றி கறி ஆகியவற்றை உண்ண கூடாது என பிசிசிஐ உணவு கட்டுப்பாடு விதித்துள்ளது. 

 
இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வரவுள்ள ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாட இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அதன்படி, இனி இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட கூடாதாம். அதற்கு பதிலாக ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளை மட்டுமே உண்ண வேண்டுமாம்.  
 
வரவிருக்கும் போட்டிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு வீரர்கள் தேவையற்ற எடையை அதிகரிக்காமல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ கடுமையான உணவு திட்டத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது.