திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:19 IST)

இங்கிலாந்து பவுலர்களிடம் பெட்டி பாம்பாய் அடங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்… இலக்கு இதுதான்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்துள்ளது.

டி 20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் மெல்போர்னில் தற்போது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பந்துவீச்சில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களைக் கைப்பற்றி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை ஸ்கோர்களை சேர்க்க விடாமல் பார்த்துக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணியில் அதிக பட்சமாக ஷான் மசூத் 38 ரன்களும், பாபர் ஆசாம் 32 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் பாக் அணி 8 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.