1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (23:13 IST)

ஒருநாள் கிரிக்கெட் போட்டி ; இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி

India
இந்தியாவுக்கு எதிரான  முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது என்பதும் இதன் காரணமாக 40 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 250 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணியில், சஞ்சி சாம்சன் 86 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களும், தாக்கூர் 33 ரன்களும் அடித்தனர்.  இறுதியில், 8 விக்கெட் இழப்பிற்கு 40 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தோற்றது.

எனவே தென்னப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Edited by Sinoj