திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (21:37 IST)

ஐசிசி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் நெதர்லாந்து வீரர்

icc best palyer July
ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் நெதர்லாந்து வீரர் இடம்பெற்றுள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் அமைப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து அவர்களை கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

இதில், ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜேக் க்ராவ்லி, கிறிஸ்வோக்ஸ்,  நெதர்லாந்து அணியின் பாஸ் டீ லிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது ஐசிசி.

இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் வீராங்கனைகளில் கார்டனர், பெர்ரி, பர்ண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.