1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (11:50 IST)

ஆசியாவில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய விசிட்டிங் பவுலர்… நாதன் லயன் புது சாதனை!

ஆஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் தற்போது விளையாடும் சுழல்பந்து வீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் 100 போட்டிகளை விளையாடி மைல்கல்லை எட்டினார். இந்தியாவுக்கு எதிராக தற்போது நடந்து வரும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஆசியக் கண்டத்தில் ஒரு மிகச்சிறப்பான சாதனையை படைத்துள்ளார். ஆசியாவில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய விசிட்டிங் பவுலர் என்ற சாதனையை ஷேன் வார்ன்  வசம் இருந்து இப்போது அவர் தனதாக்கியுள்ளார். நாதன் லயன் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோருக்கு அடுத்து டேனியல் வெட்டோரியும் இந்த பட்டியலில் உள்ளார்.