வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (11:30 IST)

இதய சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் முரளிதரன்!

இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் தற்போது சன்ரைஸர்ஸ் அணி உள்ளிட்டவற்றிற்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இதய கோளாறால் பாதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் உள்ளதாகவும், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.