ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (07:19 IST)

10 வருடகால சவால்… ரோஹித் ஷர்மாவைப் பெருமைபடுத்திய சி எஸ் கே அணி!

மீண்டும் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்பியுள்ள நிலையில் அந்த அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் தற்போது 36 வயதாகும் ரோஹித் ஷர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி உள்ளது. ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ள ரோஹித் ஷர்மாவை மரியாதை இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் நடத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். மளமளவென பாலோயர்களின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டியாளராகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோஹித் ஷர்மாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக “2013-2023 : பத்தாண்டு கால உத்வேகமான சவால். மிகுந்த மரியாதை ரோஹித் ஷர்மா” என ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.