திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2025 (08:17 IST)

விராட் கோலி ஃபார்ம் அவுட் என சொல்கிறார்கள்… ஆனால் இன்று? – பாகிஸ்தான் கேப்டன் புகழ்ச்சி!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுவிட்டது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்வதை உறுதி செய்துள்ளது.

துபாயில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். இறுதியில், 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 43 ஆவது ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்டியது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக சதமடித்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார் விராட் கோலி. தனது சதத்துக்காக ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்நிலையில் கோலியின் இன்னிங்ஸ் குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் “நான் விராட் கோலியின் தொழில் நேர்த்தியைப் பார்த்து  வியக்கிறேன். நான் அவரின் பிட்னெஸ் மற்றும் செயல்பாடுகளை பாராட்டுவேன். நிறைய பேர் அவர் ஃபார்ம் அவுட்டில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இன்று அவர் மிக எளிதாக விளையாடினார்” எனக் கூறியுள்ளார்.