1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (09:25 IST)

பும்ரா இருக்கும்போது வேறு யார சொல்ல முடியும்… தோனியின் பேவரைட் பவுலர்!

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளிலும் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராதான் நம்பர் 1 பவுலர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லலாம்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாஸ்ப்ரீத் பும்ரா. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பவுலிங்கின் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் ஒரு ரன் கூட சேர்க்காமல் அவர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்குக் கேப்டனாக வரலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் உங்களின் பேவரைட் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “பும்ரா இருக்கும்போது வேறு யாரை சொல்லமுடியும். பவுலர்களை சொல்ல சொன்னால் மிக எளிதாக பும்ராவை சொல்லிவிடுவேன். ஆனால் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால்தான் சிக்கல். ஏனென்றால் நாம் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதற்காக நம்மிடம் சிறந்த பவுலர்கள் இல்லை என்று அர்த்தமில்லை. இருப்பவர்களில் சிறந்தவராக பும்ரா தோன்றுகிறார்” எனக் கூறியுள்ளார்.