செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2022 (17:15 IST)

என்ன நடக்குது… டேப்போடு வந்து கொஞ்ச நேரத்தில் நடுவரை குழப்பிய ஷமி!

இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

ஐபிஎல் தொடரி இன்றைய முதல் போட்டியில் RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய வந்த ஆர் சி பி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளஸ்சி சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, இந்த தொடர் முழுவதும் பார்ம் அவுட்டில் இருக்கும் கோலி நிதானமாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் முகமது ஷமி பந்துவீச வந்த போது திடீரென தனது ஸ்டெப்ஸில் குழம்பியதால், அளக்கும் டேப் எடுத்துக் கொண்டு வந்து அளக்க ஆரம்பித்தார். இதனால் போட்டி தாமதமாகும் என்பதால் நடுவர் அவரோடு சென்று வாக்குவாதம் செய்தார். ஆனாலும் ஷமி, டேப் கொண்டு அளந்த பின்னரே பந்துவீச வந்தார்.