திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (11:03 IST)

எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகள் வேண்டும்; மித்தாலி ராஜ்

பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டும்  என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.


 

 
ஐசிசி உலக மகளிர் கிரிக்கெட் போட்டிள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நேற்று நாடு திரும்பியது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் புள்ளி விவரங்களை பார்த்தால் எங்கள் தரம் நன்றாக உயர்ந்து இருப்பது தெளிவாக தெரிகிறது. ஐபிஎல் போட்டிகள் உள்ளூர் வீராங்கனைகளின் தரத்தை உயர்த்த உதவிகரமாக இருக்கும். ஐபிஎல் போட்டிகளை நடத்துவது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்ததாகும். ஆனால் ஐபிஎல் போட்டிகள் வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்த வழிவகுக்கும் என்றார்.
 
மேலும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மக்கள் மனதை அதிகம் கவர்ந்து இருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது என்று தெரிவித்தார்.