செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2024 (14:12 IST)

இந்திய பேட்டிங்கை அச்சுறுத்தும் ஆஸி வேகப்பந்து வீச்சு கூட்டணி… மிட்செல் ஸ்டார்க் அபாரம்!

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் தற்போது அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் நடந்துள்ளன ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் மற்றும் அஸ்வின் ஆகியோர் உள்ளே வந்துள்ளனர். துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கிய முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் மிட்செல் ஸ்டார்க் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலை எல் பி டபிள் யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பின்னர் கில் மற்றும் கே எல் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் விக்கெட் விழுந்ததும் அடுத்தடுத்து கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் பெரிய இன்னிங்ஸை கட்டமைக்க முடியாமல் தடுமாறி விக்கெட்களைப் பறிகொடுத்தனர். நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது இந்திய அணி 176 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்களை இழந்து ஆடிவருகிறது.

ஆஸி அணியில் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.  ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்களும் பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்துள்ளனர்.