செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

கோலி கம்பீர் சண்டை… கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – ஹர்பஜன் சிங் வேதனை!

நேற்று லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர்.  பின்னர் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி பிரித்து அழைத்துச் சென்றனர்.

இந்த மோதல் குறித்து தன்னுடைய இணைய சேனலில் பேசியுள்ள ஹர்பஜன் சிங் “நான் 2008 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்தை அறைந்ததற்காக வெட்கப்படுகிறேன். நேற்றைய போட்டியில் கிரிக்கெட்டை விட சண்டைதான் அதிகமாக இருந்தது. இருவரின் சண்டை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே நடந்த மோதலுக்குப் பிறகு இருவரின் உறவும் சுமூகமாகவே இல்லை” என தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.