திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (21:24 IST)

ஆல் விக்கெட் அவுட்;150 இலக்கு! – சாதிக்குமா கிங்ஸ் லெவன்!

அரபு அமீரகத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவனுக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 150ன் ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்று ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ரன்ரேட்டை அதிரடியாக குறைக்க திட்டமிட்ட பஞ்சாப் அணி கொல்கத்தா அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிரமத்தை அளித்துள்ளது.

மிக மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை பெற்று 150 ஐ இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு கிங்ஸ் லெவன் அணி எட்டிவிடும் இலக்காகவே இருந்தாலும் நைட் ரைடர்ஸ் அணி பவுலிங்கில் சாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.