1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2024 (12:14 IST)

ப்ளையிங் கிஸ்ஸா குடுக்குற.. அபராதத்தை கட்டு! கொல்கத்தா அணி வீரருக்கு குட்டு வைத்த ஐபிஎல் நிர்வாகம்!

Harshit Rana
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் எதிர் அணி வீரர்களிடம் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஹர்ஷித் ராணாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று மாலை 7.30 மணி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்த நிலையில் சேஸிங்கில் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை எடுத்து நூல் இழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

இந்த போட்டியில் சேஸிங்கில் சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால் 21 பந்துகளுக்கு 4 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 32 ரன்களை குவித்து நல்ல ஃபார்மில் இருந்தபோது, கொல்கத்தா அணி பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.


அதை கொண்டாடும் விதமாக ஹர்ஷித் ராணா, மயங்க் அகர்வால் முகத்திற்கு முன்னால் வந்து ப்ளையிங் கிஸ் கொடுப்பது போல செய்து சீண்டினார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஹர்ஷித் ராணாவின் இந்த செயல் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறி ஹர்ஷித் ராணா செயல்பட்டதாக அவரது ஒரு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 60% அபராதமாக செலுத்த வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Edit by Prasanth.K