வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (17:10 IST)

அனுஷ்காவுடன் தனது பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடும் கோலி..

விராட் கோலி தனது 31 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் பூட்டானில் கொண்டாடிய புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வங்கதேசத்துடனான தொடரில் கேப்டனாக ரோஹித் ஷர்மா களத்தில் இருக்கும் நிலையில் விராட் கோலி தனது 31 ஆவது பிறந்தநாளை தனது காதல் மனைவியுடன் பூட்டானில் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் பசுமை போர்த்திய மலைக்கு கீழே காஃபி கோப்பைகளுடனான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் விராட் கோலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக், ஷகீர் கான், நடிகர் அனுபம் கர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.