புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (18:40 IST)

ஐபிஎல் தொடர்- சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜுன் மாதம் வரை நடக்கவுள்ளது. இந்த தொடரில் விளையாட சன்ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னருக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.
 
இதனால் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க ஒரு பட்டியலை தயார் செய்தது. அந்த பட்டியலில் ஷிகார் தவான், மனீஷ்பாண்டே, வில்லியம்சன், சகீப்-அல்-ஹசன் ஆகியோர் இருந்தனர்.
 
இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்து அனிக்கு கேப்டனாக செயல்பட்டு வருவதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.